Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 கோடி பட்ஜெட், கிராபிக்ஸ் காட்சிக்கு 3.5 கோடி : எதிர்பார்ப்பில் கயல் படம்

20 டிச, 2014 - 17:52 IST
எழுத்தின் அளவு:

மைனா, கும்கி வெற்றிப் படங்களை அடுத்து பிரபுசாலமன் இயக்கும் படம் கயல். லிங்கா படத்தில் நஷ்டமடைந்ததாக புலம்பிக்கொண்டிருக்கும் திரையரங்க அதிபர்கள் மத்தியில் கயல் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. டிசம்பர் 25 ஆம் தேதி அன்று மீகாமன், வெள்ளைக்கார துரை உட்பட வேறுசில படங்கள் வெளியாகின்றன. ஆனாலும், கயல் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்தான் திரையரங்கத்தினர் மத்தியில் போட்டி நிலவுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்கின்றனர்.. திரையரங்கத்தினர் மத்தியில் கயல் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு மற்றொரு காரணமாக, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ், பி.மதனை குறிப்பிடுகின்றனர்! மதன் இதற்கு முன் தயாரித்த அத்தனை படங்களும் வசூலில் சாதனை படைத்தன. அது மட்டுமல்ல, தனுஷிடமிருந்து அவர் வாங்கி வெளியிட்ட வேலையில்லா பட்டதாரி படமும் சூப்பர் ஹிட்டாகி ஓடி தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தைத்தேடிக்கொடுத்தது. இதன் காரணமாக, பி.மதன் தயாரிப்பில் தயாராகி உள்ள கயல் படத்துக்கும் அதிக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது! 625 திரையரங்குகளில் கயல் படம் வெளியாகிறது.


மைனா, கும்கி உட்பட பிரபுசாலமன் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் 5 கோடிக்குள் அதாவது சிறுமுதலீட்டில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படங்கள். பிரபுசாலமன் முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் படம் கயல்தான். இப்படத்தின் பட்ஜெட் 15 கோடி. கயல் படத்தில் மிகவும் பிரம்மாண்டமான சுனாமி காட்சி ஒன்று இடம்பெறுகிறது. செயற்கையான சுனாமி யை உருவாக்கி ஏறக்குறைய 45 நாட்கள் படமாக்கப்பட்டது இந்தக்காட்சி. இந்த சுனாமிக்காட்சிக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மட்டுமே 3.5 கோடி செலவிடப்பட்டிருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in