பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அசாருதீனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், சங்கீதா பிஜ்லானியாக நடிகை கரீனா கபூர் நடிக்கப்போவதாக தகவல் வௌியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இதில் இம்ரான் ஹாஸ்மி, அசாருதீனாக நடிக்க இருக்கிறார். ஆண்டனி டி சோசா இயக்க, ரோகித் ஷெட்டி தயாரிக்கிறார். இப்படத்தில் அசாருதீனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், கரீனா கபூரை நடிக்க பேசி வருகின்றனர்.
பொதுவாக கரீனா கபூர், படத்தில் தனக்கு பிரதான ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பார், செகண்ட் ஹீரோயின் போன்ற ரோல் இருந்தால் கண்டிப்பாக அதனை மறுத்து விடுவார். இந்தப்படத்தில் கரீனாவின் ரோல் எந்தளவுக்கு முக்கியமானது என்று தெரியவில்லை. அதனால் இப்படத்தில் நடிக்க சற்று தயக்கம் காட்டுகிறாராம். அதேசமயம் இப்படத்தை தயாரிப்பவர் தனது நண்பர் ரோகித் ஷெட்டி என்பதால் இப்படத்தில் அவர் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது கரீனா விடுமுறை கொண்டாட்டத்திற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தபிறகே சங்கீதாவாக அவர் நடிப்பாரா, மாட்டாரா என்பது தெரியவரும். கரீனாவின் வருகைக்காக ஆண்டனி டிசோசா, ரோகித் உள்ளிட்டவர்கள் காத்திருக்கின்றனர்.