ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு புதிய வணிக வளாகத்துடன் கூடிய மால் தியேட்டர் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை சாந்தி தியேட்டர் 1961ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிய மறு ஆண்டே அதனை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதியிடமிருந்து சிவாஜி வாங்கினார். அதன் பிறகு சிவாஜி நடித்த படங்கள் மட்டும் திரையிடப்பட்டது. சிவாஜி சினிமாவில் நடிப்பதை குறைத்த உடன் மற்ற படங்கள் திரையிடப்பட்டது. பிரபு நடித்த படங்கள் சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள். தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. ரஜினி நடித்த சந்திரமுகி படம் 800 நாட்களை தாண்டி ஓடியதும், சிவாஜி நடித்த திரிசூலம் ஒரு வருடம் தாண்டி ஓடியதும் சாந்தி தியேட்டரில்தான்.
ஒரு காலத்தில் வெளியூரில் இருந்து சென்னை வரும் ரசிகர்களுக்கு சிவாஜியின் சாந்தி தியேட்டர் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டாக இருந்தது. காலத்துக்கு ஏற்ப தியேட்டரில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. குளிர்பதன வசதி, நவீன ஆடியோ சிஸ்டம், சொகுசு இருக்கைகள் எடுப்பான முகப்பு தோற்றம் என பல மாற்றம் கண்டது சாந்தி தியேட்டர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரை இரண்டாக பிரித்து சாய் சாந்தி தியேட்டர் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு எல்லா பொருட்களும் கிடைக்கும் வணிக வளாகமாவும், அதற்குள் குறைந்த இருக்கைகள் கொண்ட 4 மினி தியேட்டர்களும் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. "புதிய வணிக வளாகம் கட்டப்பட்டாலும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே நீடிக்கும். ஒட்டுமொத்த வளாகத்திற்கு சிவாஜி பெயர் வைக்கப்படும்" என்று தியேட்டர் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இதுபற்றி சிவாஜி குடும்பத்தார் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.