ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
வடிவேலுவின் காமெடி பன்ஞ் டயலாக்கில் படம் தயாரிப்பது இப்போது புது டிரண்ட். அந்த வரிசையில் தயாராகிக் கொண்டிருக்கிறது கக்கக்கபோ. இம்சை அரசன் 22ம் புலிகேசி படத்தில் வடிவேலு அடிக்கடி பேசும் வசனம் இது. இதில் கருணாஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, ரோபோ சங்கர், மயில்சாமி, ஆதவன் உள்பட பத்துக்கும் மேற்றபட்ட காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். கேஷவ் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், சாக்ஷி அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். புதுமுக இயக்குனர் வி.எஸ்.விஜய் இயக்குகிறார், பி.சி.சிவன் இசை அமைத்துள்ளார்.
"பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அடுத்த மாதம் பாடல்களை வெளியிடுகிறோம். காதலை மையமாக வைத்து பின்னப்பட்ட காமெடி படம். இரண்டு மணி நேரம் எல்லோரையும் சிரிக்க வைக்கும் ஒரே நோக்கத்துடன் படமாக்கி உள்ளோம். காதல், காமெடியுடன் ஒரு மெசேஜும் படத்தில் இருக்கிறது" என்கிறார் இயக்குனர் பி.எஸ்.விஜய்.