தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அறிந்தும் அறியாமலும், பில்லா 2 படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன். அலிபாபா, கழுகு, வானவாரயன் வல்லவராயன், யாமிருக்க பயமே, வன்மம் படங்களில் நடித்தவர் கிருஷ்ணா, இவர்களது தந்தை பட்டியல் சேகர். ஆர்யா, பரத் நடித்த பட்டியல் படத்தை தயாரித்ததால் பட்டியல் சேகர் என்று அழைக்கப்படுகிறார். பட்டியல் தவிர கழகு, அலிபாபா, படங்களையும் தயாரித்தார்.
தற்போது இவரும் நடிகராகிவிட்டார். புதியவர்கள் இணைந்து உருவாக்கும் ராஜதந்திரம் என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் 6 முக்கிய கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனி டீசர்கள் வெளியிடப்பட்டது. அதில் பட்டியல் சேகருக்கும் தனி டீசர் வெளியிடப்பட்டது. அதனை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் கிருஷ்ணா. ஜெயபிரகாஷ், சுப்பு பஞ்சு வரிசையில் இவரும் தயாரிப்பாளராக இருந்து நடிகராகியிருக்கிறார்.