‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை; விஷாலுக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒரு படம் வெளிவந்து விடுகிறது. 'பூஜை' வெளியான சூட்டோடு, 'ஆம்பள' படம் விரைவில் வெளியாகிறது. இந்த படத்தில் முதன் முறையாக, ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார், விஷால். இந்த ஜோடிப் பொருத்தம் 'ஒர்க் அவுட்' ஆகுமா என, கோடம்பாக்கத்தில் ஒரு பக்கம் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம், தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது நயன்தாராவா, ஹன்சிகாவா என்ற வாக்குவாதமும் சூடு பறக்கிறது. ஹன்சிகாவோ, 'யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. படத்தில் நடிப்பதுடன் என் வேலை முடிந்து விடுகிறது. தேவையில்லாத வம்பில் மாட்டி விடாதீர்கள்...' என்கிறாராம்.