பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இரண்டு கதாநாயகிகள் ஒரே படத்தில் நடிக்கும் போது, யார் சிறப்பாக நடித்தார்கள் என்ற பேச்சு எழுவது வழக்கமான விஷயம்தான். ஒரு சில படங்களில்தான் அந்தப் படங்களில் நடிக்கும் இரண்டு கதாநாயகிகளும் பெயர் வாங்குவார்கள். ஆனால், ஒருவருக்கு சிறப்பான கதாபாத்திரம் அமைந்து, மற்றொருவருக்கு சுமாரான கதாபாத்திரம் அமைந்தால், சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் அதிகப் பாராட்டுக்களைப் பெற்று விடுவார். அப்படி ஒரு நிலைதான் தற்போது அனுஷ்காவிற்கு ஏற்பட்டிருக்கிறது.
'லிங்கா' படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாக பலவாறாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சோனாக்ஷி சின்ஹாவின் கதாபாத்திர அமைப்பைப் பற்றி சில விமர்சனங்கள் இருந்தாலும் நடிப்பு விஷயத்தில் அந்தக் கதாபாத்திர அமைப்பின் குறைகளையும் மறக்க வைத்து, தமிழே தெரியாத சோனாக்ஷி சின்ஹா சூப்பரான பெயரை வாங்கிவிட்டார்.
ஆனால், கதாபாத்திர அமைப்பிலும் ஆடை விஷயத்திலும் தொலைக்காட்சி நிருபராக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவிற்கு விமர்சகர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் எதிர்மறையான கருத்துக்கள் வந்ததால் அனுஷ்கா ரொம்பவே 'அப்செட்' ஆகி உள்ளாராம். அதிலும் அவர் படத்தில் அறிமுகமாகும் காட்சியில் பாவாடை தாவணி அணிந்திருந்ததை தெலுங்கு மீடியாக்கள் ஓவராகவே விமர்சித்து விட்டதாம். 'லிங்கா'வில் தன் மீது படிந்த கறையை தெலுங்கில் வெளியாக உள்ள 'ருத்ரமாதேவி, பாகுபலி' ஆகியவைதான் போக்கும் என மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.
அஜித்துடன் அனுஷ்கா நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்திலும் த்ரிஷா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'லிங்கா' போல இந்தப் படத்திலும் இருவரையும் ஒப்பிட்டுப் பேசத்தான் போகிறார்கள்...!