ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் ஒப்பனை கலைஞராக ஆண்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும், பெண்கள் வேலை செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. இதை மீறி சில பெண்கள் மேக்கப்வுமனாக வேலை பார்த்து வந்தனர். அவர்களில் பானு என்பவரும் ஒருவர். மற்ற மேக்கப்மேன்களுக்கு எல்லாம் ஒருநாளைக்கு சுமார் இரண்டாயிரம்தான் சம்பளம்.
பானுவுக்கு ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம். அதுமட்டுமல்ல, நடிகர் நடிகைகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலில்தான் அவருக்கு ரூம் போட வேண்டும். விமானத்திலும் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வார். இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களுடன்தான் படங்களில் பணிபுரிய ஒப்புக்கொள்வாராம் பானு. அதனாலோ என்னவோ ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்கள் எல்லாருமே பானுவை தங்கள் படங்களில் பணியாற்ற அழைக்கின்றனர்.
ஷங்கர் இயக்கிய சிவாஜி படம் தொடங்கி ரஜினிக்கு இவர்தான் ஒப்பனை கலைஞர். சிவாஜி படத்தில் பானு போட்ட மேக்கப் ரஜினிக்கு பிடித்துப்போக பானுவை தன் ஆஸ்தான மேக்கப்வுமனாக்கிவிட்டார் ரஜினி. லிங்கா படத்தில் ரஜினிக்கு மட்டுமல்ல அனுஷ்கா, சோனாக்ஷி ஆகியோருக்கும் பானுவே மேக்கப்போட்டிருக்கிறார். லிங்கா படத்திற்காக மூன்று நட்சத்திரங்களுக்கு மேக்கப்போட்டதால் பானுவுக்கு ஒருநாளைக்கு 65 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.