ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்ட் டைரக்டர் வீரசமருக்கு நடிப்பு ஆசையை ஊட்டிவிட்டது இயக்குனர் சசி. பூ படத்தில் பார்வதிக்கு அண்ணனாக நடித்தார். அதன் பிறகு வீரசேகரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அமலாபாலின் முதல் ஹீரோ இவர்தான். அந்தப் படம் தோல்வி அடையவே அதன் பிறகு மீண்டும் ஆர்ட் டைரக்டர் வேலையை பார்க்க போய்விட்டார். இப்போது ஒரு மீண்டும் நடிப்பு ஆசை வந்து, மொக்க படத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கிற படத்தை மொக்க படம் என்று சொல்லவில்லை. படத்தோட பெயரே மொக்க படம் என்பதுதான்.
வீரசமருக்கு ஜோடியாக அமிர்தா என்ற புதுமுகம் நடிக்கிறார். வல்லவன் இசை அமைக்கிறார். ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். "இது முழுநீள காமெடி படம். விழுந்து விழுந்து சிரிக்க வச்சி அனுப்புற படம். முதன் முதலாக நடிகர் ஸ்ரீமனின் தம்பி பிரபாகர் வில்லனாக நடித்திருக்கிறார். பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. நடிகர் மா.பா.கா. ஆனந்த் "லவ் பண்ணுங்க... லவ் பண்ணுங்க" என்ற குத்துப்பாடலை பாடி உள்ளார். விரைவில் ரிலீஸ் பண்ண இருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் டி.ஆர்.ஜெயந்திநாதன்.