டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார். 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இயக்கி உள்ள தமிழ் படம் காத்தம்மா. இதில் பிஜுராம் ஹீரோவாகவும், ஆதிரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஜில்லன் இசை அமைத்துள்ளார், ஜோஸ் எம்.தாமஸ் ராய் தயாரிக்கிறார். எல்லோருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
"சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்ட பெண், யார் உதவியும் இன்றி தானே பழிவாங்குகிற கதை. பழிவாங்க அவர் கையாளுகிற தந்திரங்களை புதுமையான திரைக்கதையில் சொல்கிறோம். லவ் வித் திரில்லர் டைப் கதை. தமிழ் மொழியில் முதலில் வெளியிட்டுவிட்டு பிறகு மலையாளத்தில் வெளியிட இருக்கிறோம். திறமையாளர்களை வரவேற்று வாழ்த்துகிற தமிழ் நாட்டு ரசிகர்கள் இந்தப் படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்" என்கிறார் இயக்குனர் எம்.டி.சுகுமார்.