ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் அறிமுகமான மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்த ஹன்சிகா அதையடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தவர், பின்னர் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். அந்த சமயத்தில் மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்றொரு பாலிஸியும் வைத்திருந்தார்.
ஆனால், இப்போதும் அவருக்கு முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைத்தபோதும், அப்படி கிடைக்கும் படங்களில் வேறு முன்னணி நடிகைகளும் இருப்பதோடு, ஹன்சிகாவை பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி விடுகிறார்கள். அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தாலும் அவருக்கு திருப்தியாக இல்லையாம்.
அதனால். இரண்டாம் தட்டு ஹீரோக்கள் பக்கமும் தற்போது திரும்பியிருக்கிறார் ஹன்சிகா. குறிப்பாக, மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த அவர், அடுத்தபடியாக, விஜயசேதுபதியுடனும் நடிக்க ஆசைப்படுகிறாராம். தற்போது அவருடன் நயன்தாரா நானும் ரெளடிதான் படத்தில் நடித்து விட்ட நிலையில், ஹன்சிகாவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம்.
மேலும், இனிமேல் இரண்டாம் தட்டோ,முன்றாம் தட்டு ஹீரோக்களோ யாருடைய படமாக இருந்தாலும் சிங்கிள் ஹீரோயின் வேடம் உள்ள படங்களுக்கே முதலிடம் கொடுக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம் ஹன்சிகா.