‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழில், ''முரட்டு காளை, கழுகு, உல்லாசப்பறவைகள்'' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரதி அக்னிகோத்ரி. தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் இவர் மிகப்பிரபலம். ரதி, இப்போதும் தனது வயதுக்கு ஏற்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் இப்போது சினிமாவுக்கு வந்துவிட்டார். இந்தியில், ''ஒன் நைட் ஸ்டாண்ட்'' எனும் படம் உருவாக இருக்கிறது. இதில் ரதியின் மகன் தனுஜ் விர்வானி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். முன்னதாக இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராணா நடிப்பதாக இருந்தது. தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட ஸ்டிரைக் காரணமாக அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து சுமார் 25 பேரை ஆட்டிசனுக்கு வரவைத்து அதில் தனுஜ் விர்வானியை தேர்வு செய்துள்ளனர். தனுஜ் ஜோடியாக பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். ''ஒன் நைட் ஸ்டாண்ட்'' படத்தின் ஷூட்டிங், மும்பையில் அடுத்தவாரம் துவங்க இருக்கிறது, 2016 ஜூனில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.