‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ராக்கி சாவந்த் நடிப்பில் உருவாகியுள்ள மும்பை கேன் டான்ஸ் சாலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், அப்பட இயக்குனர் சச்சிந்ரா சர்மாவை, மனிஷா என்ற நடிகை தாக்கிய சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மனிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் ராக்கி சாவ்ந்தின் நண்பர். இந்த படத்தில் எனக்கு ரோல் தருவதாக இயக்குனர் சச்சிந்ரா சர்மா கூறியிருந்தார். அதற்காக, நானும் மற்ற எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளாமல், காத்திருந்தேன். ஆனால், இறுதியில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டவில்லை, இதன்காரணமாகவே, இயக்குனர் சர்மா மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
இதுதொடர்பாக, சச்சிந்தரா சர்மா கூறியதாவது, மனிஷா, யார் என்றே எனக்குத் தெரியாது. படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பரத்திற்காக, இதுபோன்ற சம்பவங்கள், சமீபகாலமாக அரங்கேறுகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சர்மா கூறினார்.