'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை கஜோல் - அஜய் தேவ்கன் ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது 2வது முறையாக கஜோல் கர்ப்பம் தரித்துள்ளார். குழந்தை பிறக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்குள் கஜோல் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். எனக்கு மீண்டும் ஒரு பெண்ணே பிறக்க ஆசைப்படுகிறேன். மகன்தான் வேண்டும் என நான் வேண்டவே இல்லை. நானும், எனது தங்கை தனிஷாவும் வீட்டை நிறைத்து வைத்திருந்தோம். எங்களைப் பார்த்தால் நிறைவாக இருக்கிறது என்று பெற்றோர் கூறுவார்கள். அதேபோல எனக்கும் இரண்டு மகள்களாக இருந்தால் மிகவும் சவுகரியமாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். எனவே எனக்குப் பெண்தான் மீண்டும் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கஜோல் கூறியுள்ளார்.