அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
1958ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் காமெடி படம், ''ஜல்தி கா நாம் காடி''. கிஷோர் குமார், அசோக் குமார், அனூப் குமார் ஆகியோருடன் மதுபாலா நடித்திருந்தார். இப்படம் இப்போது ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதனை பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்க இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் ஷாரூக்கான் நடிப்பதாக தகவல் வௌியானது. இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக அர்ஜூன் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. அர்ஜூன் கபூர், ஷாரூக்கின் தம்பியாக நடிக்க இருக்கிறார். தற்போது படத்திற்கான கதை உருவாக்க வேலைகள் நடந்து வருகிறது. கூடவே படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்புகள் வௌியிடப்பட இருக்கிறது.