ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத 'பப்ளிசிட்டி' இயக்குனர் லிங்குசாமிக்கு இந்த ஆண்டு கிடைத்தது. அது 'லிங்கா' படத்தை இயக்கி கே.எஸ்.ரவிக்குமாருக்கும் கிடைக்கவில்லை, 'ஐ' படத்தை இயக்கிய ஷங்கருக்கும் கூட கிடைக்கவில்லை. 'மொத்த வித்தையையும் இறக்கி' லிங்குசாமி இயக்கிய 'அஞ்சான்' படம்தான் அவருக்கு மிகப் பெரும் பப்ளிசிட்டியை வாரி வழங்கியது. சமூக வலைத்தளங்களில் திரைப்படங்களின் புகைப்படங்களை வைத்து கமெண்ட் அடித்து வெளியிடப்படும் கார்ட்டூன் வகையிலான 'மீமீ' என்று அழைக்கப்படும் விஷயங்கள் லிங்குசாமிக்கு அதிகமாகவே நடந்தது. அவரையும், அஞ்சான் படத்தையும் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் 'கழுவிக் கழுவி' ஊற்றினார்கள்.