ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உனக்கும் எனக்கும் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும் த்ரிஷாவும் இணைந்த படம் பூலோகம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப்படம் முடிவடைந்து பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. பூலோகம் எப்போது வெளிவரும் என்றே தெரியாததால், அப்படத்தை மறந்துவிட்டு மற்றொரு படத்தில் இணைந்துள்ளனர் ஜெயம்ரவியும், த்ரிஷாவும். அஞ்சலியும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். அப்பாடக்கர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை இயக்கி வருகிறார் சுராஜ். அலெக்ஸ்பாண்டியன் படத்தின் தோல்வியால் காணாமல்போனவர் அப்பாடக்கர் படத்தின் மூலம் மீண்டு வந்திருக்கிறார். ஜெயம் ரவி, அஞ்சலி, த்ரிஷா தவிர சூரியும் நடிக்கும் அப்பாடக்கர் படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் யு.கே.செந்தில்குமார். ஜூலை மாதம் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பைத் துவக்கினார்கள். பிறகு பாண்டிச்சேரியில் இரண்டாவது ஷெட்யூலை முடித்துவிட்டு, பின்னர் ஜெயம் ரவி, சூரி, அஞ்சலி ஆகியோர் பங்குபெற்ற 3வது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் நடைபெற்றது. வெற்றிகரமாக 3 ஷெட்யூலையும் முடித்த அப்பா டக்கர் டீம் அடுத்ததாக பொள்ளாச்சிக்கு செல்லவிருக்கிறது. இந்த ஷெட்யூலில் த்ரிஷா சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் படமாக்கப்படுகிறது. அதோடு அப்பாடக்கர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துவிடுமாம். அதன் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி ஆகியோருடன் வெளிநாடுகளுக்கு சென்று பாடல்காட்சிகளை எடுக்க இருக்கிறார்கள். அப்பாடக்கர் படத்தில் பூர்ணா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி நடிக்கிறாராம்.