தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஆபீஸ் மெகா தொடரில் விஷ்ணுவாக நடித்த விஷ்ணுவும், லட்சுமியாக நடித்த மதுமிலாவும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் செம பாப்புலர். ஆபீஸ் மெகாத் தொடரின் சீசன் 1 ல் விஷ்ணுவின் காதலியாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மதுமிலா சீசன் 2ல் இன்னும் தலைகாட்டவில்லை. அவர் எங்கே போனார் என்ற கேள்வியும், எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பும் ஆபீஸ் தொடரை பார்ப்பவர்களின் மனதில் இன்னும் இருக்கிறது. பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக சில காட்சிகளில் தலைகாட்டிய மதுமிலா, தற்போது விமல் நடிக்கும் மாப்ள சிங்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல, ஆபீஸ் தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த விஷ்ணுவே இந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். விமல் கதாநாயகனாக நடிக்கும் மாப்ள சிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன்பிக்சர்ஸ் பி மதன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் ஏற்கனவே கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்களில் நடித்த விமல் மூன்றாவதுமுறையாக மதன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.