'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் படங்கள் எல்லாம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்களை வைத்தே, சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு வந்துள்ள நிலையில், இந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விபரங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார். ஒரு படம் வெளியாகிறதென்றால், அந்த படத்தின் கலெக்சன்கள் குறித்து ஐந்துக்கு மேற்பட்ட புள்ளிவிபரங்கள் வருகின்றன. அந்த குறிப்பிட்ட படம் ஓடும் தியேட்டருக்கு சென்றாலோ, வெறிச்சோடி கிடக்கிறது. மக்களை தியேட்டருக்கு வரவைக்கவே, இத்தகைய பொய் கலெக்சன் விபரங்கள் வெளியிடப்படுகின்றன. படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விபரங்களை, ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பு வெளியிட வேண்டும். அப்போது தான் உண்மையான தகவல் வெளிவரும் என்று அஜய் தேவ்கன் கூறினார். சில நாட்களுக்கு முன்னர், அமீர் கானும், இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.