பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு படத்தில் என்ன இருக்கிறது, ரசிகர்களை எது கவரப் போகிறது என்பதை முன்னரே வெளிப்படுத்தும் வீடியோ முன்னோட்டமான டிரைலர்களை வித்தியாசமாக உருவாக்குவதும் இப்போது வித்தியாசமாக அமைந்து வருகிறது. படம் எந்த அளவிற்கு வித்தியாசமாக இருக்கிறதோ அதே அளவிற்கு டிரைலர்களும், டீசர்களும் வித்தியாசமாக இருந்தால் அது ரசிகர்களை எளிதில் சென்றடைந்து விடுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சில டிரைலர்களும், டீசர்களும் உண்மையிலேயே வித்தியாசமாகவும் ரசிக்க வைக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று ஆரஞ்சு மிட்டாய் டிரைலர். இப்படத்தின் டிரைலரில் ஒரு விஜய் சேதுபதி வந்து சாதாரணமாக படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு விஜய் சேதுபதி வந்து முதலாமவரைக் கலாய்ப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள டிரைலர்தான் இப்போதைய டிரைலர்களில் டாக் ஆப் தி யூடியூப் ஆக இருக்கிறது.
அடுத்து உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், நடிக்கும் நண்பேன்டா படத்தின் டீசர். படத்தின் டீசரைப் பார்க்கும் போதே தெரிகிறது இது ஒரு சரியான நகைச்சுவைப் படம் என்று. படப்பிடிப்பில் நடிகர்கள் ரீ-டேக் வாங்கியதையே ப்ளூப்பர்ஸ் போன்று தொகுத்து அதை ஒரு டீசராக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது.
விஷால், ஹன்சிகா நடிப்பில் சுந்தர் .சி இயக்கி வரும் ஆம்பள படத்திற்கான ஒரு டீசரையும் கடந்த சில நாட்கள் முன் வெளியிட்டிருந்தார்கள். அதில் படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவிடம், இயக்குனர் சுந்தர் .சியும், நடிகர் விஷாலும் படத்தின் பாடல்கள் இப்படி வேண்டும், அப்படி வேண்டும், பல்லவி இப்படி இருக்க வேண்டும், சரணம் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, கடைசியில் அவரோ, ஆமாம் சார்...இந்த பல்லவி..சரணம்...அப்படின்னா என்ன ? எனக் கேட்கும் இந்த டீசரும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
படத்துக்கு யோசிக்கிற மாதிரியே இனி டீசருக்கும், டிரைலருக்கும் யோசிச்சே ஆகணும்...