மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் கடந்த மே மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற 'யாமிருக்க பயமே' திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு 'நமோ பூதாத்மா' என்ற பெயரில் நேற்று வெளியானது. பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறிய கோமல் குமார் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா மேனன், காயத்ரி ஐயர், தெலுங்கு நகைச்சுவை நடிகர் ஆலி மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு கன்னடத்திலும் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். தெலுங்கு நடிகர் ஆலி இப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் பேய்க் கதாபாத்திரத்தில் நடித்த அனஸ்வரா கன்னடத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் வெளியாகி வெற்றி பெறும் படங்கள் தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். பொதுவாக பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களைத்தான் அதிகமாக ரீமேக் செய்வார்கள். ஆனால், சமீப காலமாக சிறிய படங்களாக இருந்தாலும் அவற்றிற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அந்தப் படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன. 'யாமிருக்க பயமே' திரைப்படம் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காமலே தமிழில் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக த்ரில்லர் படங்கள் என்றால் பயமுறுத்தத்தான் வைப்பார்கள், ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவையையும் கலந்து கொடுத்ததால்தான் படம் வெற்றி பெற்றது. அதுவே, கன்னட ரீமேக்கிலும் நடந்திருக்கிறது என்கிறார்கள்.