தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
இயக்குனர்கள் மகன்கள்கூட ஹீரோவாக நடிக்கத்தான் விரும்புகிறார்கள். அந்த வகையில, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய், கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ், கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, பாரதிராஜாவின் மகன் மனோஜ் என பல டைரக்டர்களின் வாரிசுகள் தந்தை வழியில் படம் இயக்காமல் நடிகர்களாகத்தான் உருவெடுத்துள்ளனர்.
இந்த வரிசையில், இப்போது பாரதிராஜாவின் மகனான மனோஜ் மட்டும் தான் நடிப்பதற்கு சரியான வாய்ப்புகள் அமையாததால் இயக்குனர் ஆகியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே தனது தந்தை கமலை வைத்து இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்யப்போவதாக சொல்லி, சில பிரபல ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டார். ஆனால் அவரை நம்பி யாரும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.
அதனால், என்ன செய்யலாம் என்று தீவரமாக யோசித்துவந்த மனோஜ், கடந்த சில மாதஙக்ளாக சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான முய்றசியில் ஈடுப்ட்டிருந்தார். ஆனால், அந்த படத்தில் அவரே நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகரை நடிக்க வைக்கிறாரா? என்பது மட்டும் சஸ்பென்சாக இருந்தது.
ஆனால், நேற்று அப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் துவக்கி விட்டார் மனோஜ், இதில் நாயகனாக விசாகன் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். சிவப்பு ரோஜாக்களில் கமல் நடித்தது போன்ற சைக்கோவின் கதை என்றாலும், இன்றைய காலகட்டத்தில் அப்படியொரு சைக்கோ இருந்தால் அவரது பழிவாங்கும் படலம் எப்படி இருககும் என்கிற வகையில், கதையை புதுமைப்படுத்தியிருக்கிறாராம் மனோஜ்.