ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ் சினிமாவில் 100 படங்களுக்குமேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர், அவரது வாரிசாக மு.க. முத்து நடிகரானானர். இன்னொரு மகன் மு.க.ஸ்டாலின் சின்னத்திரையில் நடித்தார், பேரன் உதயநிதியும், அருள்நிதியும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த வரிசையில் இப்போது ரக்ஷன் அறிமுகமாகிறார். அவர் உதயநிதியின் தாய்மாமன் மகன், அதாவது உதயநிதியின் தாய் துர்கா ஸ்டாலினின் தம்பி டாக்டர் ராஜமூர்த்தியின் மகன் ரக்ஷன். திருட்டுரயில் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
முத்து நகரம் படத்தை இயக்கிய திருப்பதி இந்தப் படத்தை இயக்குகிறார். ஜெய்பிரகாஷ் இசை அமைக்கிறார், விஜய்வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். "தூத்துக்குடியில் உள்ள நான்கு நண்பர்களை உள்ளூர் போலீஸ் செய்யாத குற்றத்துக்கு துரத்துகிறது. இதற்காக பயந்துபோய் திருட்டு ரெயிலேறி சென்னை வரும் நான்கு பேரும் இங்கு போலீஸ், தாதா மோதலுக்குள் சிக்கி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தோட கதை சுருக்கம்.