தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சினிமாவில் பிசியாகி விட்டார். இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்தவர் இப்போது தனது தாய்மொழியான தெலுங்கிலும் நடிப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனது தம்பி புஜ்ஜி சினிமாவில் நடிக்க விரும்பியதால், அவரை பல மாதங்களாக ஜிம் சென்று உடல் எடையை குறைக்குமாறு கூறி வந்தார்.
அதையடுத்து, டயட்ஸ், உடற்பயிற்சி மூலம் இப்போது உடம்பை குறைத்து விட்ட அவரது தம்பி சமீபத்தில் வெளியான, விழி மூடி யோசித்தால் என்ற படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். அவர் நடித்த சேட்டன் என்ற கேரக்டர் கவனிப்படுவதாக இருந்தது. இருப்பினும், இன்னும் பெரிய அளவில் சினிமாவில் வளர வேண்டும் என்று அவர் நினைக்கிறாராம்.
அதனால், அடுத்தகட்டமாக தனக்கு தெரிந்த டைரக்டர்கள் மட்டுமின்றி, தான் கமிட்டாகும் கம்பெனிகளுக்கு செல்லும்போது தம்பியையும் அழைத்து சென்று டைரக்டர்களிடம் அறிமுகம் செய்யும ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு நல்ல கேரக்டர் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறாராம். அதனால் அக்காவின் சிபாரிசின்பேரில் நான் சீக்கிரமே சினிமாவில் வளர்ந்து விடுவேன் என்று உற்சாக மிகுதியுடன் சொல்கிறார் புஜ்ஜி.