மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
45வது சர்வதேச கோவா திரைப்பட விழா, கோவாவின் பனாஜியில் நவ. 20ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 30ம் தேதி வரை பத்துநாட்கள் நடைபெற இருக்கிறது. இந்தவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இருந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. அந்த பரிசுகளின் விபரம் வருமாறு...
* சிறந்த படம் - ரூ.40 லட்சம் ரொக்கம், தங்கமயில் விருது மற்றும் சான்று(தயாரிப்பாளர்-இயக்குநர் சமமாக பகிர்ந்து கொள்வர்)
* சிறந்த நடிகர் - ரூ.10 லட்சம் ரொக்கம், வெள்ளி மயில் விருது
* சிறந்த நடிகை - ரூ.10 லட்சம் ரொக்கம், வெள்ளி மயில் விருது
* சிறந்த இயக்குநர் - ரூ.15 லட்சம் ரொக்கம், வெள்ளி மயில் விருது
* நடுவர் குழுவின் சிறப்பு விருது - ரூ.15 லட்சம், வெள்ளி மயில் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது - பிரபல சீன இயக்குநர் வாங்-கர்-வை க்கு வழங்கப்பட இருக்கிறது. இவருக்கு ரூ.10 லட்சம், வெள்ளி மயில் விருது.
இந்திய திரைப்பட பிரமுகருக்கான நூற்றாண்டு விருது - நடிகர் ரஜினிகாந்த். ரூ.10 லட்சம், வெள்ளி மயில் விருது(துவக்க விழாவின் போது கொடுக்கப்பட்டது)