ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குலாப் கேங் இயக்குநர் சவுமிக் சென், நீண்டநாட்களுக்கு முன்பாகவே பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்காரின் வாழ்க்கையை படமாக இயக்க போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் பி.சி.சர்க்காராக, அக்ஷ்ய் குமார் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சவுமிக் சென், முழு கதையையும் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் அக்ஷ்யை சந்தித்து இப்படத்தில் நடிப்பது தொடர்பாக பேசியிருக்கிறார். அவரும் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. பி.சி.சர்க்காரின் வாழ்க்கையை படமாக்குவது தொடர்பாக அவரது மகன் ஜூனியர் சர்க்காரை சந்தித்து பேச இருக்கிறார் சவுமிக் சென்.