ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
தேவகலா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம், ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா. இந்தப் படத்தில் சஞ்சீவ் முரளி என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு முதல் படத்திலிலேயே இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் மலையாள பட நாயகி ஸ்ரீரக்ஷா. இன்னொருவர் புதுமுகம் அஸ்வினி. இவர்கள் தவிர ரஞ்சித் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"ஊரில் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என்று அலையும் வில்லனுக்கு ஊரே பயப்படுவதை பார்த்து தானும் அவனைப்போல ஆக வேண்டும் என்பது ஹீரோவின் ஆசை. இதற்காக அவரிடம் வேலைக்கு சேர்கிறார். வில்லனுக்காக அடிதடியில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் வில்லனால் ஹீரோவின் குடும்பமே நாசமாக அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. அதாவது வில்லனிடம் கற்றுக்கொண்ட வித்தகளை வைத்தே அவன் கதையை முடிக்கிற கதை. கூடா நட்பு கேடாய் முடியும் என்ற தத்துவத்தை சொல்கிறோம்.
நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். கடற்கரையில் பிரமாண்ட கோட்டை ஷெட் போட்டு 100 நடன கலைஞர்களை கொண்டு பிரமாண்டமாக பாடல் எடுத்திருக்கிறோம். அய்யப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சுமன்பிச்சு இசை அமைத்திருக்கிறார். நாங்கள் அனைவருமே புதியவர்கள்" என்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபால்.