ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் சினிமாவின் ஆளுமை மிக்க படைப்பாளி பாரதிராஜா. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருக்கும் 16 வயதினிலே தந்த மண்சார்ந்த படைப்பாளி. சினிமா நடிகராகும் ஆசையில் சென்னை வந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா, இயக்குனரானார் என்றாலும் அவருக்குள் இருக்கும் நடிகன் அவ்வப்போது எட்டிப் பார்ப்பான்.
கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் பாரதிராஜா. அந்தப் படம் தோல்வி அடையவே நடிப்பதை கைவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கிய ரெட்டைச்சுழி படத்தில் நடித்தார். அதுவும் சரியாக போகவில்லை. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாண்டியநாடு படத்தில் விஷாலின் அப்பாவாக நடித்தார். அந்த படம் ஹிட்டாக அதன் பிறகு தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
தற்போது அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் ஓம். இதையும் அவரே இயக்குகிறார். ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி தன் ஓய்வு காலத்தை கழிக்க அமெரிக்காவில் இருக்கும் மகள் வீட்டுக்கு போகிறார். அங்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு அவர் மீது காதல் வருகிறது. இருவருக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிபூர்வமான விஷயங்கள்தான் படம். கிட்டத்தட்ட முதல் மரியாதை மாதிரியான கதை. யுவன் இசை அமைக்கிறார். அமெரிக்காவில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார் பாரதிராஜா.