ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரைசிங் சன் பிலிம் சார்பில் ரவி சங்கர் தயாரித்துள்ள படம் ஒரு பந்து 4 ரன் ஒரு விக்கெட். வினய் கிருஷ்ணா- ஹாசிகா தத் நடித்துள்ள இந்த படத்தை வீரா இயக்கியுள்ளார். உமேஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் நல்ல முத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது டைரக்டர் வீரா, படம் பற்றி பேசுகையில், டி.வியில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு நடக்கும்போது, ஒருவன் சந்திக்கும் பிரச்னைதான் இந்த படம். தலைப்பு கிரிக்கெட் போன்று தெரிந்தாலும் காமெடி, பேய் எல்லாம் இந்த கதையில் உள்ளது. முதலில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த ஹாசிகா தத் பின்னர் பேயாகி விடுவார். அந்த காட்சிகளில் படு மிரட்டலாக நடித்திருக்கிறார். இந்த படம் ஹரார் படமாக இருந்தாலும் குழந்தைகள்,பெண்களுக்கு ரொம்ப பிடித்தமானதாக இருக்கும்.
மேலும், இந்த படத்தின் கதையை நான் முதலில் நடிகை ஹாசிகா தத்திடம்தான் சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதையடுத்து அவர்தான் தயாரிப்பாளர் ரவி சங்கரை அறிமுகம் செய்தார். அப்படித்தான் இந்த படம் தொடங்கப்பட்டது என்றார்.
பின்னர் ஹாசிகா தத் பேசும்போது, இந்த படக்குழுவினர் பேசும்போது, நான்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பது போல் பேசினார்கள். ஆனால், உண்மையில் நான் புரொடியூசர் இல்லை. ரவி சங்கர்தான் புரொடியூசர். அவருக்கு பல பிஸ்னஸ் உள்ளது. அதனால் அவரால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை. அதனால் நான் பொறுப்பு எடுத்து படப்பிடிப்பை நடத்தினேன். அதைப்பார்த்துதான் நான் புரொடியூசர் என்று நினைத்து பேசுகிறார்கள் என்று மற்றவர்கள் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார் ஹாசிகா தத்
முன்னதாக, படக்குழுவினர் தயாரிப்பாளரின் பெயர் சொல்லும்போது ஹாசிகா தத்தை குறிப்பிட்டு பேசும்போதெல்லாம். அய்யோ நான் புரொடியூசர் இல்லீங்க என்று கையெடுத்து கும்பிட்டபடி அவர்களுக்கு மறுப்பு தெரிவித்துக்கொண்டேயிருந்தார்.