வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
தமிழில், ''மெட்ராஸ்'' படத்தில் அறிமுகமானவர் கேத்ரினா தெரசா. கேரளாவில் பிறந்த கேத்ரினா, வளர்ந்தது துபாயில். நடனம் கற்று, மாடலிங் செய்து, சினிமா நடிகையானவர் இதுவரை 14 படங்களில் நடித்து விட்டார். என்றாலும் தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் ருத்ரமாதேவி படத்தைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின் நாயகி அனுஷ்காவுக்கு அடுத்த முக்கியத்துவம் இவர் கேரக்டருக்குத்தான். ருத்ரமாதேவி அரண்மனையின் இளவரசியாக நடிக்கிறார். அல்லு அர்ஜுனின் ஜோடி. ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கும், இவருக்கும் மோதல் வந்து விடுமாம். இருவருமே நடனத்தில் கில்லாடிகள் என்பதால் அரண்மனையின் தர்பார் மண்டபத்தில் இருவரும் போட்டி போட்டு நடனமாடுவார்களாம். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜயந்தி மாலாவும் பத்மினியும் ஒரு பாட்டுக்கு போட்டிபோட்டு ஆடுவதைப் போன்ற காட்சியாம்.
இந்த நடனக்காட்சியை பத்து நாட்கள் வரை எடுத்தார்களாம். ஒரு கட்டத்தில் நிஜமாகவே அனுஷ்காவுக்கும், கேத்ரினாவுக்கும் போட்டி வந்துவிட்டதாம். ஆடி முடித்ததும் அனுஷ்கா தான் ஆடியதை மானிட்டரில் பார்த்து தான் சிறப்பாக ஆடியதாக திருப்தி ஏற்பட்டால்தான் ஓகே சொல்வாராம். இந்த பாட்டும், ஆட்டமும் பட்டைய கிளப்பும் என்கிறார்கள்.