ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் திலீப் குமார். சிலதினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை, லீலாவதி மருத்துவமனையில் இறந்ததாக டுவிட்டரில் காட்டுத்தீயாய் செய்தி பரவியது. ஆனால் இதுப்பற்றி விசாரித்ததில் அவர் நலமுடன் இருப்பதாகவும், யாரோ சிலர் இதுபோன்று வதந்தியை பரப்பிவிட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் இதுப்பற்றி நடிகர் அமிதாப் பச்சன் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, யாரோ சிலர், திலீப் குமார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக, முட்டாள்தனமாக வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். நான் இதுப்பற்றி சாயிராவுடன் பேசினேன், திலீப்குமார் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.
இதேப்போன்று கடந்த 2011ம் ஆண்டும் திலீப் குமார் இறந்துவிட்டதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.