ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜமெளலி இயக்கத்தில், தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மகதீரா. சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவும், காஜல் அகர்வாலும் நடித்திருந்தனர். இப்படம் தமிழிலும் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு, இங்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. ராம்சரண் தேஜா நடித்த ரோலில் சாகித் கபூர் நடிக்க இருக்கிறார். ''கிக்'' படத்தை இயக்கிய சஜித் நடியாத்வாலா இயக்குகிறார். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சமீபத்தில் சாகித் நடிப்பில் வெளியான ஹைடர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இப்போது சாகித், சாந்தார் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்தப்படியாக ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு மகதீரா படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார் சாகித்.