ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் லூசுத்தனமான, குழந்தைத்தனமாக ஹீரோயினாக வலம் வந்தவர் ஜெனீலியா, பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், சச்சின், உள்பட பல படங்களில் நடித்தார்.
ஜெனிலியாவுக்கும், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் இணைந்து துஜே மேரி கசம் இந்திப் படத்தில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்து மஸ்தி, தேரே நால் லவ் ஹோ, லை பாரி படங்களில் நடித்தபோது தீவிரமாக காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ஜெனிலியா அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்து தாயாக புரமோஷன் பெற்றிருக்கிறார். இந்த தகவலை அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தனது வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும் ரிதேஷ் தெரிவித்திருக்கிறார்.