ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'அரண்மனை'. சுந்தர் .சி இயக்கத்தில் ஹன்சிகா, லட்சுமி ராய், ஆன்ட்ரியா, வினய், சந்தானம், கோவை சரளா, மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. வழக்கமான 'சந்திரமுகி' டைப் பேய்ப்படம்தான் என்றாலும், கலகலப்பான நகைச்சுவையாலும், மூன்று கிளாமரான ஹீரோயின்களாலும் படத்தை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குனர் சுந்தர் .சி.
தற்போது இந்தப் படம் தெலுங்கில் 'சந்திரகலா' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளதாம். தெலுங்கில் பேய்ப் படங்களுக்கும், தமிழில் வெற்றி பெற்று தெலுங்கில் மொழி மாற்றம் ஆகும் படங்களுக்கும் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த விதத்தில் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பதாலும், தமிழிலேயே படத்தில் கொஞ்சம் 'தெலுங்குப்' பட வாசனை அடித்ததாலும் இந்தப் படம் நேரடி தெலுங்குப் படம் போலத்தான் இருக்கும் என டோலிவுட்டினர் சொல்கிறார்கள்.
'அரண்மனை' படமும் 'சந்திரமுகி' படம் போலவே ஒரு பழைய அரண்மனையைச் சுற்றிய படம்தான் என்பதால் பெயரில் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாமல் தெலுங்கில் 'சந்திரகலா' என்ற பெயரிலேயே பொருத்தமாக வெளியிடுகிறார்கள்.