ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஞ்சான் படத்தின் தோல்வியைதைத் தொடர்ந்து அப்செட்டில் இருந்த நடிகர் சூர்யா தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்திர் நடித்து வருகிறார். பிரியாணி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படம் இது. சூர்யாவும், வெங்கட் பிரபுவும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள். சூர்யாவுடன் நயன்தாரா, எமி ஜாக்ஸன், பிரேம்ஜி அமரன், ஜெயராம், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த மாஸ் படத்தில் நடிக்கிறார்கள். முதல்முறையாக இணைந்துள்ள சூர்யா, வெங்கட் பிரபு கூட்டணியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இதுவரை இயக்கிய 5 படங்களுக்கும் யுவன்தான் இசையமைப்பாளர். மாஸ் படத்தில் 6 வது முறையாக வெங்கட்பிரபு உடன் கைகோர்த்திருக்கிறார்யுவன் ஷங்கர் ராஜா. அதேபோல் ஏற்கெனவே சூர்யா நடித்த 7 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன். படத்துக்குப் படம் வெளிநாட்டு ஆல்பங்களிலிருந்து ட்ராக்கை எடுத்துப் பயன்படுத்தும் யுவன் மாஸ் படத்திலும் அவ்வாறே செய்ய உள்ளார். இம்முறை அதை வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
அதாவது, தன்னுடைய ஃபேவரைட் இசைக்கலைஞரான மைக்கேல் ஜாக்ஸனுக்கு மரியாதை செய்யும்விதமாக மாஸ் படத்தின் பாடல் ஒன்றில் அவருடைய புகழ்பெற்ற வரிகளை பயன்படுத்த இருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா. மறைந்த மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லர் என்ற சூப்பர்ஹிட் ஆல்பமில் இருந்துதான் சில வரிகளை மாஸ் படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என வெங்கட் பிரபுவும், யுவனும் முடிவு செய்திருக்கிறார்களாம்.