ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், மலையாள சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே அமெரிக்காவில் பணியாற்றும் ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பத்மப்ரியா. திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மறுத்து பத்மப்பரியா கூறியதாவது: சில மாதங்கள் வரை கணவருடன் அமெரிக்காவில் இருக்க திட்டமிட்டிருக்கிறேன். மற்றபடி சினிமாவை கைவிடும் எண்ணம் இல்லை. திருமணம் நடிப்புக்கு தடையாக இல்லை. இதுபற்றி நானும் ஜாஸ்மினும் முன்பே பேசியிருக்கிறோம். எனது நடிப்புக்கும், சுதந்திரத்திற்கும் ஜாஸ்மின் எப்போதும் குறுக்கே நிற்கமாட்டார். பெண்களுக்கு சம உரிமைகொடுக்கும் அவரது கேரக்டர் பிடித்துதான் அவரை காதலிக்கவே ஆரம்பித்தேன்.
எப்போதும் நடிக்கும் கேரக்டர்களை கவனமாக தேர்ந்தெடுப்பேன். இனி இன்னும் கவனமாக இருப்பேன். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நடிப்பை கைவிட மாட்டேன். அது எனக்கு சுவாசம் மாதிரி. என்கிறார் பத்மப்பரியா.