ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை த்ரிஷாவை பற்றி எழுதும்போதெல்லாம், நம்மவர்கள், ராணாடகுபதி, என்ற பெயரைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதுவார்கள். ஆனால், அதெல்லாம் 'நேற்றோடுபோயாச்சு' கதையாகிவிட்டது. த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் என்ற செய்தி றெக்கை கட்டிப் பறக்கஆரம்பித்த பின், ராணா டகுபதியை பற்றி நம்மவர்கள் மறந்துவிட்டார்கள். ஆனால், ராணா டகுபதி மற்றவர்களைப் பற்றி பாராட்டுவதில் மறக்க முடியாத ஒரு நபராகிவிட்டார்.
சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அவர் நடிகர் அஜித்தை பற்றி மனதார புகழ்ந்து பேசியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தில் கௌரவத் தோற்றத்தில், சில காட்சிகளில் தான் இணைந்து நடித்திருக்கிறார். அந்த குறைந்த நாட்களிலேயே, ராணாவின் மனம் கவர்ந்த நடிகராகி விட்டார்அஜித்.“நான் இதுவரை சந்தித்தவர்களிலேயே, இரண்டே இரண்டு பேர் தான் மிகச்சிறந்தவர்கள். ஒருவர் அஜித், மற்றொருவர் அனுஷ்கா,” என அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.