Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'த்ரிஷ்யம்' ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்...

24 நவ, 2014 - 11:30 IST
எழுத்தின் அளவு:

மலையாளத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'த்ரிஷ்யம்'.அதன்பின், இந்தப்படம் கன்னடத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிக்க 'த்ரிஷ்யா' என்ற பெயரிலும், தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க 'த்ரிஷ்யம்' என்ற பெயரிலும் வெளிவந்து அந்தந்த மொழிகளிலும் வெற்றி பெற்றது.


தமிழில் 'பாபநாசம்' என்றபெயரில் கமல்ஹாசன், கௌதமி நடிக்க மலையாள ஒரிஜனல் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்கி முடித்திருக்கிறார். தமிழில் படப்பிடிப்பு முடிவடைந்து , தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. படம், அநேகமாக பொங்கலுக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது இந்தப்படம், ஹிந்தியிலும் தயாராகப் போகிறதாம். ஹிந்தியில், அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு அடுத்தடுத்து நடக்கும் என்று தெரிகிறது. மலையாளப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே ஹிந்தியிலும் இயக்குவார் என்கிறார்கள். ஜீதுஜோசப், 'பாபநாசம்' படத்தின் வேலைகளை முடித்ததும், அடுத்து, ஒரு மலையாளப் படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தை முடித்த பின், ஹிந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் 'த்ரிஷ்யம்' படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in