'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
ஸ்ரீதேவி, அனில்கபூர் நடித்த சூப்பர்ஹிட் படமான மிஸ்டர் இந்தியா, பாண்டிட் குயின் (பூலான் தேவியின் வாழ்க்கை), குயின் எலிசபெத் (ஆங்கிலம்) போன்ற படங்களை இயக்கியுள்ளார் சேகர் கபூர் (மறைந்த இந்தி நடிகர் தேவ் ஆனந்தின் மருமகன்) . இயக்குனர் மற்றும் நடிகர் (விஸ்வரூபம்) சேகர் கபூர் கிரியேட்டிவிட்டி என்றால் என்ன என்பது பற்றி மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சி நடத்தினார். அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி
கிரியேட்டிவிட்டி வெறும் லெக்சராக இல்லாமல், ஆடியன்ஸ் ரியாக்ஷன். ஆடியன்சை கேள்வி கேட்டு பதில் பெற்று சுவாரசியமாக நடத்தினார். அவருடைய உதவியாளர்களாக இருந்து இப்போது பிரபல நடிகர்களாக, டைரக்டர்களாக இருக்கும் சதிஷ் கெளசிக், மனோஜ் பாஜ்பாய், சுதிர் ஆகியோரும் பங்குபெற்று தங்களின் சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். எந்த நடிகருக்கும் தான் நடித்துக் காண்பிப்பதில்லை. இந்த சிச்சுவேசனுக்கு என்ன தேவை என்று மட்டும் விளக்குவேன். நடிகர் தன் சொந்த கற்பனையில் நடிப்பது, நான் எதிர்பார்ப்பதை விட சிறப்பாகவே வரும் என்றார்.
அவர் நடித்து இயக்கிய பிரபலமான படங்களிலிருந்து சில காட்சிகளை திரையிட்டு, அவற்றை எப்படி உருவாக்கினார்? புதுமை, கிரியேட்டிவ் ஆக என்னவெல்லாம் செய்தார்? என்பதை விளக்குவார் என்று பலர் எதிர்பார்த்தனர். அப்படி செய்திருந்தால், நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகு கூடியிருக்கும்.
அரங்கில் இருந்த பலர், அவரது கேள்விகளுக்கு பதில்கள் சொன்னது, பொருத்தமான கேள்விகளை கேட்டது, ஆடியன்சின் தரத்தை வெளிப்படுத்தியது.