Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா எனது கடவுள்... - தனுஷ்

23 நவ, 2014 - 14:45 IST
எழுத்தின் அளவு:

ஒவ்வொரு ரசிகருக்கும், ஒவ்வொரு நடிகருக்கும் மிகவும் அபிமான இசையமைப்பாளர்கள் என யாரையாவது ஒருவரைத்தான் குறிப்பிடுவார்கள். சராசரி ரசிகரைப் போல சில நடிகர்களும் அவர்களது மனம் கவர்ந்த இசையைமப்பாளரைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமான ஒன்றுதான். அப்படித்தான் இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றி நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் நடிக்கும் ஷமிதாப் ஹிந்திப் படத்திற்கு தற்போது இளையராஜா இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார். பல பேட்டிகளில் தனுஷ் அவருடைய மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாதான் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தனுஷின் ஆரம்ப காலப் படங்களில் இளையராஜாவின் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடல்கள் தனுஷை ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இசையமைத்த பல படங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் படம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த்து என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதே சமயம், சமீப காலத்தில் தனுஷ், அவர் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள் ஆகியவற்றில் அனிருத்தை மட்டும்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜாவை சுத்தமாகவே மறந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


இதனிடயே தனுஷ் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் “என்னுடைய கடவுள், என்னுடைய தலைவன், என்னுடைய இசைஞானி, என்னுடைய இசை, என்னுடைய இன்ஸ்பிரேஷன், என்னுடைய ஆன்மா, என்னுடைய இதயத் துடிப்பு, என்னுடைய இளையராஜா” என புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.


இதுவரை இளையராஜாவை இந்த அளவிற்கு வேறு யாராவது புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களா என தனுஷ் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in