'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா உள்பட பல படங்களில் நடித்த பிந்துமாதவிக்கு, தற்போது கைவசம் சில படங்கள் இருந்தபோதும், படங்கள் திரைக்கு வர தாமதமாகிக் கொண்டு வருகிறது. இதில் அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள தமிழுககு எண் 1 ஐ அழுத்தவும் என்ற படம் மட்டும் தற்போது ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது. நேற்று அப்படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது பிந்து மாதவியும் வந்திருந்தார்.
அப்போது பிந்து மாதவி பேசும்போது, தமிழில் இதுவரை நான் நடித்ததில் இப்படத்தில் எனக்கு வித்தியாசமான வேடம் கிடைத்திருக்கிறது. படத்தில் நடித்த தினேசுக்கும் எனக்குமிடையே நல்லதொரு புரிதல் இருந்தது. அதனால் காட்சிகளின் அவுட்புட் நன்றாக வெளிப்பட்டது. அவருடன் நடிதது நல்ல எக்ஸ்பீரியன்ஸ். மேலும், படத்தின் டைரக்டர், கேமராமேனுக்கிடையே எனக்கு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருநதது என்று கூறிய பிந்துமாதவி, தான் பேசிக்கொண்டிருந்தபோதே, அப்படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குனர்களையும் மேடைக்கு அழைத்தார்.