ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிப்பு, இயக்கம், பாடல்கள், நடனம் என திரைத்துறை மட்டுமல்லாது, சமூக சேவை என அனைத்து துறைகளிலும் தான் தேர்ந்துள்ளது மட்டுமல்லாமல், தன் ரசிகர்களையும் ஊக்குவிக்கும் நடிகர் கமலஹாசன், தன் படங்கள், தன் எழுத்து வண்ணத்தில் உருவான கவிதைகள், பாடல்கள் உள்ளிட்டவற்றை, ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், "உலகநாயகன் டியூப்" என்ற பெயரில், அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் துவக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த உலகநாயகன் டியூப்பிற்கு, 2 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைபர்களாகவும், இதில் உள்ள வீடியோக்களை, 50 ஆயிரம் பேர் பார்வையிட்டும் உள்ளனர்.
இந்த உலகநாயகன் டியூப் சேனலில், முதற்கட்டமாக, நடிகர் கமலுடன், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆர்.சி.சக்தி மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் பங்கேற்ற கேள்வி- பதில் நிகழ்ச்சி பதிவேற்றப்பட்டுள்ளது.
இது முழுக்க, முழுக்க கமலின் ஐடியா தான் என்றும், இந்த சேனலின் மூலம், தனது படம் குறித்து புதிய தகவல்களையும், தனது கைவண்ணத்தில் உருவாகும் பாடல்கள், கவிதைகள் குறித்து தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த சேனல் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப டீம் கூறியுள்ளது.