'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பி.கே. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. படத்தை அடுத்தமாதம் டிசம்பர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ்க்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டனர் அமீர்கான் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.
இதுகுறித்து விசாரித்ததில், அமீர்கானின் எண்ணம், முழுக்க முழுக்க பி.கே. பற்றியது தான். சாப்பிடும்போது, தூங்கும்போது என எல்லா நேரங்களிலும் பி.கே. படத்தை பற்றி தான் சிந்தித்து கொண்டு இருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் இதுதொடர்பாக அதிகம் பேசி வருகிறார். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க எப்படி எல்லாம் புரொமோட் செய்யலாம் என இயக்குநரிடம் விவாதித்து வருகிறார் என அமீர்கானின் நெருங்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.