தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதில் தயங்கவே மாட்டார் அஜித். சக நடிகர்கள் உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வார். விக்ரமுக்காக அப்படி ஒரு உதவியை சமீபத்தில் செய்து கொடுத்திருக்கிறார் அஜித். கோலி சோடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 10 எண்றதுக்குள்ள என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக முதல் முறையாக சமந்தா இந்தப் படத்தில் நடிக்கிறார்.
தி ட்ரான்ஸ்போர்ட்டர் என்ற வௌநாட்டுப்படத்தை தழுவி எடுக்கப்பட்டு வரும் 10 எண்றதுக்குள்ளே படத்தில் கார் ரேஸிங் காட்சி ஒன்று இருக்கிறதாம். அதற்காக ரேஸிங் அனுபவம் பெற்ற ஒருவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். இது குறித்து படத்தின் ஸ்டன்ட் இயக்குனரான லீ விட்டோகரிடம் ஐடியா கேட்டிருக்கிறார். ஏற்கெனவே அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் பணிபுரிந்தவர்தான் இந்த லீ விட்டோகர். விஜய்மில்டன் கார் ரேஸ் காட்சி பற்றி சொன்னதும், அஜித்திற்கு போன் செய்து மேற்படி ரேஸிங் சீனை விளக்கி ஆலோசனை கேட்டிருக்கிறார் லீ விட்டோகர்.
விஷயத்தை முழுவதுமாகக் கேட்ட அஜித்,இதற்கு நான் ஆலோசனை சொல்வதைவிட கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் சொன்னால்தான் சரியாக இருக்கும். அவர் என்னுடைய நண்பர்தான். நீங்கள் அவரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள். என்னைவிட அவரின் ஆலோசனை உங்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதோடு, நரேனுக்கு போன் செய்து 10 எண்றதுக்குள்ளே குழுவினருக்கு உதவி செய்யும்படியும் கூறி இருக்கிறார். அஜித் சொன்னதை வைத்து, கார் பந்தய வீரருமான நரேன் கார்த்திகேயனிடம் சென்றிருக்கிறது 10 எண்றதுக்குள்ள டீம்! அஜித் மூலம் வந்ததால், உடனடியாக ஓ.கே. சொன்ன நரேன், அந்த ரேஸிங் காட்சிக்கு தன் அனுபவம் மூலம் நல்ல ஆலோசனைகளை வழங்கினராம்.