'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
அதீப் ரைஸ் இயக்கத்தில், பருண் சோப்தி, சீனாஸ், கவி சாஸ்திரி, வருண் கந்தல்வால் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம், ''மெயின் அவுர் மிஸ்டர் ரைட்''. இப்படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளரால் இப்படம் தாமதமாகி கொண்டே செல்கிறது. படத்தின் ஹீரோயினான சீனாஸ் சர்வதேச அளவில் பிஸியாக இருப்பதால் இப்படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை, இதனால் 6 மாதம் படம் தாமதமானது. இப்போது படத்தின் இசையமைப்பாளர் பப்பி லகரிக்காக ஒருவருடம் காத்திருக்கிறது படக்குழு. இப்படத்திற்காக பியார் பினா... எனும் பாடலை ரீ-ரெக்கார்டு செய்ய வேண்டி இருக்கிறதாம். இதனால் மெயின் அவுர் மிஸ்டர் ரைட் படம் மேலும் தாமதமாகும் என தெரிகிறது.