ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் சினிமாவின் ஹிட் நாயகி என்றால் அது தீபிகா படுகோனே தான். அவர் நடித்த பல படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் சேர்ந்துள்ளது. இவர் இப்போது பிக்கு என்ற படத்தில் நடிக்கிறார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக தமிழ் கற்றார், ஹேப்பி நியூ இயர் படத்திற்காக மராட்டி மொழி கற்றார். இப்போது அடுத்து நான் நடிக்க இருக்கும் பிக்கு படத்திற்காக பெங்காலி மொழி கற்க இருக்கிறார்.
இதுகுறித்து தீபிகா கூறுகையில், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழ் பொண்ணாக நடித்தேன், ராம் லீலாவில் குஜராத்தி பொண்ணாக நடித்தேன், ஹேப்பி நியூ இயரில் மராட்டிய பெண்ணாக நடித்தேன், பைண்டிங் பேனியில் கோவா பொண்ணாக நடித்தேன், இப்போது பிக்கு படத்திற்காக பெங்காலி பொண்ணாக நடிக்கிறேன். மிகவும் மென்மையான மொழி பெங்காலி. ஒவ்வொரு முறையும் புதிய மொழிகளை கற்கும்போது ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
பிக்கு படத்தில் தீபிகா தவிர அமிதாப் பச்சன், இர்பான் கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர், சுஜித் சிர்கார் இயக்குகிறார்.