'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக
நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். லக்ஷ்மன் இயக்குகிறார். ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுகிறது. ஜெயம்ரவி - ஹன்சிகா பங்கேற்கும் காட்சிகள் அங்கே படமாக்கப்படுகிறது.
இப்படம் பற்றி இயக்குநர் லக்ஷ்மன் கூறுகையில், பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான காமெடி இதில் இருக்கும். இமான் இசை இப்போது எல்லா படங்களிலும் பக்கபலமா இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கிறது. இந்த பாடல்கள் மூலம் இமானுக்கு ஹிந்தி படத்தின் கதவு திறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.