ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் உறவு இருப்பது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, விராட் கோஹ்லி, முதன்முதலாக வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது எங்களின் தனிப்பட்ட விவகாரம், இதுகுறித்து, பொதுஇடத்தில் விவாதிக்க தான் விரும்பவில்லை என்றும், எங்களது தனிப்பட்ட விஷயததிற்கு, மற்றவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று விராட் கேட்டு்க்கொண்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி கூறியதாவது, அனுஷ்கா சர்மாவுடனான உறவு விவகாரத்தில், தான் எதையும் மறைத்ததில்லை, அதில் மறைப்பற்கும் ஒன்றும் இல்லை. இவ்விவகாரம் குறித்து தாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதனாலேயே, இது விவாதப் பொருளாக மாறிவிடுகிறது. தாங்கள் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அனுஷ்காவுடனான உறவு குறித்து தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், இது விவாதிக்கக்கூடிய அளவிற்கு பெரிய விஷயம் அல்ல என்று கோஹ்லி கூறினார்.