'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
பாலிவுட் நடிகை என்பதை விட முன்னணி பேஷன் மாடல் அழகி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது கங்கனா ரனாவத் தான். அந்தளவிற்கு, அவர் பேஷன் உலகில், நீங்கா இடம் பிடித்துள்ளார். 2006ம் ஆண்டில், பாலிவுட் திரையுலகில் அவர் அறிமுகமாகி இருந்த போதிலும், ஆனால், அவரது முழுக்கவனமும், பேஷன் துறையிலேயே வியாபித்திருந்தது. தற்போது, அவர் பேஷன் உலகின் முடிசூடா ராணியாக திகழ்கிறார். பேஷன் துறையில், தனக்கு போட்டியாளர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவரது வளர்ச்சி உள்ளது என்பது மறுப்பதற்கில்லை. 2011ம் ஆண்டில், இந்திய பேஷன் உலகில் மகுடத்தில் இருந்த கங்கனா, 2012ம் ஆண்டு துவக்கத்தில், டியோர், விவியென்னே வெஸ்ட்வுட், சனால் மற்றும் லாவின் உள்ளிட்டோர்களுக்கு போட்டியாக சர்வதேச பேஷன் உலகிலும் ஜொலிக்க துவங்கினார். நான் பேஷன் துறையில் ஈடுபடவில்லை, நான் பேஷனாகவே இருப்பதாக கங்கனா ரனாவத் கூறியிருப்பது, கங்கனா, பேஷன் துறையில் வைத்துள்ள தனது ஈடுபாட்டை வெளிக்கொணர்வதாக உள்ளது.