ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் பூஜா பட் இயக்கும், 'கேப்ரெட்' படத்தில் ரிச்சா சட்டா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். கேப்ரெட் படத்திற்காக நீண்டநாட்களாக ஹீரோயின் தேடி வந்த பூஜா, தனது படத்தில் புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க எண்ணினார். ஆனால் இப்போது ரிச்சா சட்டாவை கமிட் பண்ணியுள்ளார்.
இதுகுறித்து பூஜா பட் கூறுகையில், இந்தபடத்தை இயக்க எண்ணியபோதே படத்தில் புதுமுகம் ஒருவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் புதுமுக நடிகையிடம் அந்த கேரக்டரை சரியாக கொண்டு வர முடியுமா என்ற தயக்கமும் இருந்தது. அந்தநேரம் தான் எனக்கு ரிச்சாவின் முகம் ஞாபகம் வந்தது. இந்தப்படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியபோது சிலர் அவரை வேண்டாம் என்று கூறினார்கள், ஆனால் நான் அவரிடம் கதை சொன்னவுடன் அவரும் உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். கேப்ரெட் படத்திற்காக பூஜா தனது ரோலை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.